சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக முல்லைதீவில் பயிற்சி பட்டறை

திருகோணமலை எகெட் கரித்தாஸ் சூழல் பாதுகாப்பு குழு ஏற்பாட்டில் செடெக் நிறுவனத்துடன் மெசொரியர் நிறுவனம் இணைந்த நிதி அனுசரணையில் மாவட்டத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பாதற்கான படிக்கல் எனும் தொனிப்பொருளில் பசுமையான உலகை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் செயல்திட்டத்தில் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் செயல் திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவில் தெரிவு செய்யப்பட்ட குழுவினர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பது தொடர்பாக பயிற்சி பட்டறை முல்லைதீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டது

திருகோணமலை எகெட் கரித்தாஸ் சூழல் பாதுகாப்பு குழுவின் திட்ட இணைப்பாளர் கே .ரஞ்சித் குமார் ஒழுங்கமைப்பில் எகெட் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்பணி போல் ரோபின்ஸ் சன் தலைமையில் பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டன
குறித்த பயிற்சி பட்டறையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் தெரிவு செய்யப்பட்ட குழுவினர் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *